கங்கை நதிக்கரையில் ரம்யா பாண்டியன் திருமணம்! வைரல் புகைப்படங்கள்!

நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.
கங்கை நதிக்கரையில் ரம்யா பாண்டியன் திருமணம்.
கங்கை நதிக்கரையில் ரம்யா பாண்டியன் திருமணம்.
Published on
Updated on
1 min read

நடிகை ரம்யா பாண்டியன், 'டம்மி பட்டாசு’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ஜோக்கர், நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

குறைவான படங்களில் நடித்தாலும் பெயர் சொல்லக் கூடிய கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிப்பவர்.

இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தவர்.

பெங்களூருவில் உள்ள லவல் தவானின் யோகா மையத்தில் கடந்தாண்டு யோகா கற்க ரம்யா பாண்டியன் இணைந்தார். சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.

சமீபத்தில் தன் வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட விடியோவை ரம்யா பாண்டியன் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இருவீட்டார் சம்மதத்துடன் உத்தரகண்டில் உள்ள ரிஷிகேஷில் திருமணம் நடைபெற்றுள்ளது.

ரம்யா பாண்டியன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாது:

இன்று காலை ரிஷிகேஷ், சிவபுரி கங்கை கரையில் நடிகை ரம்யா பாண்டியன், லோவல் லவ் & அரேஞ்ச்டு மேரேஜ் சிறப்பாக நடந்தது. மணமக்களுடன் ரம்யாவின் சித்தப்பா அருண் பாண்டியன், அம்மா சாந்தி துரைப்பாண்டி, தாய் மாமா கணேஷ் குமார், உறவினர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.