‘ஹே மின்னலே’ வைரலான சிவகார்த்திகேயன் - ஆர்த்தி!

நடிகர் சிவகார்த்திகேயன் தன் மனைவியுடன் இருக்கும் விடியோ வைரலாகியுள்ளது..
‘ஹே மின்னலே’ வைரலான சிவகார்த்திகேயன் - ஆர்த்தி!
Published on
Updated on
1 min read

நடிகர் சிவகார்த்திகேயன் பகிர்ந்த விடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

அமரன் திரைப்படத்தின் வெற்றியால் நடிகர் சிவகார்த்திகேயன் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். இந்தாண்டில் தென்னிந்தியளவில் பெரிய வசூலை அடைந்த படங்களில் அமரனும் சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் ரூ. 250 கோடி வசூல் படமாக சாதனை படைத்ததுடன் படத்தை தயாரித்த நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம், வெளியிட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகவும் லாபகரமான வணிகத்தைக் கொடுத்திருக்கிறது.

இன்னும் திரையரங்குகளில் படத்திற்கு வரவேற்பு இருப்பதால், அமரன் ஓடிடி உரிமத்தைப் பெற்ற நெட்பிளிக்ஸ் நிறுவனம் திட்டமிட்ட தேதியை மாற்றி டிசம்பருக்கு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்ஸ்டாவில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அமரன் முகுந்த் வரதராஜன் தோற்றத்தில் தன் வீட்டிற்குள் மனைவி பின்னால் நின்றுகொண்டு அவரை ஆச்சரியப்படுத்துகிறார். மேலும், விடியோயுடன் அமரனில் இடம்பெற்ற, ‘ஹே.. மின்னலே’ பாடலை இணைத்து ’பிறந்த நாள் வாழ்த்துகள். லவ் யூ’ என தன் மனைவியை வாழ்த்தியுள்ளார்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் பெரிதாக வைரலானதுடன் இந்தப் பதிவுக்கு 50 லட்சத்துக்கு அதிகமானோர் விருப்பம் தெரிவித்துடன் பல பிரபலங்களும் காமண்ட் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.