சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ஹிந்தியில் மிரட்டல்! 10 கோடி பார்வைகளைக் கடந்த புஷ்பா - 2 டிரைலர்!

புஷ்பா - 2 டிரைலர் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது...

News image
Updated On :18 நவம்பர் 2024, 10:14 am

DIN

புஷ்பா - 2 திரைப்படத்தின் டிரைலர் பல சாதனைகளைப் புரிந்து வருகிறது.

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா - 2 படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாள்களாக நடைபெற்று வந்தது. ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தினாலும் சில பிரச்னைகளால் தாமதமானது.

இதற்கிடையே, மூன்று முறைக்கு மேல் படத்தின் வெளியீட்டுத் தேதியும் மாற்றப்பட்டதால் ரசிகர்களிடையே ஏமாற்றம் ஏற்பட்டது. இறுதியாக, இப்படத்தை டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் 11,000 திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், படத்தின் டிரைலர் நேற்று (நவ.17) தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி, மலையாளம் மொழிகளில் வெளியானது.

பெரிய பொருள் செலவில் எடுக்கப்பட்ட படமென்பதால் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கின்றன. குறிப்பாக, அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் ஃபாசிலுக்கு இடையேயான வசனங்கள் ரசிகர்களிடம் வைராகியுள்ளது.

ஆச்சரியமாக தெலுங்குக்கு இணையான பார்வைகள் ஹிந்தி டிரைலருக்கும் கிடைத்துள்ளதால் இப்படம் பாலிவுட்டில் பெரிய வெற்றியைப் பதிவு செய்யும் என்றே தெரிகிறது.

இதுவரை, யூடியூபில் தெலுங்கு (44 மில்லியன்), ஹிந்தி (41 மில்லியன்), தமிழ் (4.4 மில்லியன்), கன்னடம் (2 மில்லியன்), மலையாளம் (1.8 மில்லியன்), பெங்காலி (5 லட்சம்) என 100 மில்லியன் (10 கோடி) வரை டிரைலருக்கான பார்வைகள் கிடைத்துள்ளன.

Story image

மேலும், தென்னிந்தியளவில் டிரைலர் வெளியான 15 மணி நேரத்திற்குள் 40 மில்லியன் பார்வைகளைக் கடந்த முதல் படம் புஷ்பா - 2 என்கிற சாதனையையும் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.