மம்மூட்டி - மோகன்லால் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

மம்மூட்டி - மோகன்லால் படப்பிடிப்பு பூஜை விடியோ வெளியானது.
மம்மூட்டி, மோகன் லால்
மம்மூட்டி, மோகன் லால்X
Published on
Updated on
1 min read

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் முன்னனி நடிகர்களாக இருக்கும் மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். தங்களின் படங்களை இவர்களே தயாரித்தும் வெளியிடுகின்றனர்.

தற்போது, மம்மூட்டி அவரின் தயாரிப்பிலேயே ஒரு படத்தில் நடித்து வருகிறார். விநாயகன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மம்மூட்டி வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

அதேபோல், நடிகர் மோகன்லால் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் எம்புரான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மோகன்லாலின் ஆஷிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில், ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ படங்களின் இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கத்தில் நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் படத்தின் பூஜை விடியோ வெளியாகியுள்ளது.

மேலும், இந்தப் படத்தில் குஞ்சக்கோ போபன், ஃபகத் ஃபாசில், நயன்தாரா உள்ளிட்டோரும் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலையாள சினிமாவின் இருபெரும் ஆளுமைகளாகக் கருதப்படும் நடிகர்கள் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் ஆசை நிறைவேறப்போவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மம்மூட்டியும் மோகன்லாலும் இறுதியாக கடந்த 2008 ஆம் ஆண்டு ’டிவெண்டி: 20’ என்கிற மலையாளப் படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com