பிக் பாஸ் 8: வெளியேறிய வர்ஷினிக்காக பாடல் பாடிய போட்டியாளர்கள்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து நடிகை வர்ஷினி இந்த வாரம் வெளியேறினார்.
பிக் பாஸ் 8: வெளியேறிய வர்ஷினிக்காக பாடல் பாடிய போட்டியாளர்கள்!
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து நடிகை வர்ஷினி இந்த வாரம் வெளியேறினார். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த 21 நாள்களில் வர்ஷினி வெளியேறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு மூலம் போட்டியாளராக நுழைந்தவர், வெளியே போட்டியினைப் பார்த்திருந்தும் சிறப்பான ஆட்டத்தை வர்ஷினியால் கொடுக்க முடியவில்லை என்பதே ரசிகர்கள் பலரின் கருத்தாக உள்ளது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 50 நாள்களைக் கடந்துள்ளது. 50வது நாளான நேற்று 7வது வாரத்துக்கான போட்டியாளர் வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் முத்துக்குமரன், சௌந்தர்யா, விஷால், ராணவ், ஜாக்குலின், அருண், பவித்ரா, ரயான, சாச்சனா, தர்ஷிகா. வர்ஷினி, சிவகுமார், ஆனந்தி, சிவக்குமார் என 13 போட்டியாளர்கள் இருந்தனர்.

இதில், குறைந்த வாக்குகளைப் பெற்ற மூன்று போட்டியாளர்களாக தர்ஷிகா, ரயான் மற்றும் வர்ஷினி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த மூவரில் குறைந்த வாக்குகளைப் பெற்றதாக வர்ஷினி இந்த வாரம் வெளியேற்றப்பட்டார்.

வர்ஷினிக்காக பாடல்

பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களால் ஓரம்கட்டப்பட்டிருந்தாலும், வெளியே செல்லும்போது சக போட்டியாளர்கள் குறித்து நேர்மறையான கருத்துகளையே கூறிவிட்டுச்சென்றார்.

மிகுந்த நேர்மறையான எண்ணங்களுடன் வெளியேறிய தர்ஷிகாவை, சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டிலிருந்து வர்ஷினி வெளியேறும்போது, ஜெஃப்ரி, செளந்தர்யா, ஜாக்குலின், ரயன் ஆகியோர் பாடல் பாடி வர்ஷினியை அனுப்பிவைத்தனர். இந்த விடியோ இணையத்தில் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

இதுவரை வெளியேறிய போட்டியாளர்களில் வர்ஷினி வெளியேறியபோதுதான் மிகவும் நேர்மறையாக இருந்ததாக ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர்.

இதேபோன்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு அனிருத் பாடலைப் பாடி வெளியே வந்தார்.

இதையும் படிக்க | பிக் பாஸ் 8: முத்துக்குமரனுக்கு எதிராக மாறிய அருண் பிரசாத்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com