ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்ற தமிழ் நடிகை!

ஹிந்தியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் நடிகை ஸ்ருதிகா பங்கேற்பு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சல்மான் கானுடன் நடிகை ஸ்ருதிகா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சல்மான் கானுடன் நடிகை ஸ்ருதிகாபடம் | எக்ஸ்
Published on
Updated on
1 min read

ஹிந்தியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் நடிகை ஸ்ருதிகா பங்கேற்றுள்ளார்.

தமிழில் நடிகர் சூர்யாவுடன் ஸ்ரீ, ஜீவா உடன் தித்திக்குதே, மாதவனுடன் நள தமயந்தி உள்ளிட்டப் படங்களில் நாயகியாக நடித்துள்ளார் ஸ்ருதிகா.

திருமணத்துக்குப் பிறகு திரைத் துறையில் நடிப்பதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த ஸ்ருதிகா, சொந்தமாகத் தொழில் தொடங்கி, வெற்றிகரமான பெண் தொழில் முனைவோராகவும் சாதித்துள்ளார்.

பெண்களுக்கான அழகு சாதனப் பொருள்களை உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்து வருகிறார். வெளிநாட்டிற்கும் அழகுசாதனப் பொருள்களை ஏற்றுமதி செய்கிறார். இவர் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்களுக்கு இவரே விளம்பரத் தூதராகவும் உள்ளார்.

சமீபத்தில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தார்.

இதையும் படிக்க | தொடங்கியது பிக் பாஸ் 8! 18 போட்டியாளர்கள் அறிமுகம்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இக்கால ரசிகர்களுக்கும் பரீட்சயமானவராக மாறினார் ஸ்ருதிகா.

ஸ்ருதிகா அர்ஜூன்
ஸ்ருதிகா அர்ஜூன்படம் | எக்ஸ்

இந்நிலையில், ஹிந்தியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் நடிகை ஸ்ருதிகா போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார். நடிகர் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று (அக். 6) கோலாகலமாகத் தொடங்கிய நிலையில், தமிழ் நடிகை ஒருவர், ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றுள்ளதாக ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

வெகுளியான செயல்களாலும், வெளிப்படையான பேச்சினாலும் ரசிகர்களைக் கவர்ந்த ஸ்ருதிகா, ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மனங்களைக் கவர்ந்து வெற்றி பெறுவார் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com