

நடிகர் ஆர். ஜே. பாலாஜி தன் குழுவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தை முடித்தபிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இது, அவரது 44-வது படமாக உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சூர்யா யார் படத்தில் நடிப்பார் என எதிர்பார்ப்பு எழுந்தது.
இயக்குநர் வெற்றிமாறனுடன் வாடிவாசல் படத்தில் இணைகிறாரா இல்லை சுதா கொங்காராவுடனான பேச்சுவார்த்தை துவங்குமா என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், முற்றிலும் எதிர்பாராத வகையில் புதிய தகவல் வெளியானது. அதன்படி, சூர்யாவின் 45-வது படத்தை நடிகர் ஆர். ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாவும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், சூர்யாவின் ஆயுத எழுத்து படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த, ’ஜன கன மன’ பாடலுடன் ஆர். ஜே. பாலாஜி தன் குழுவினருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனால், இந்தக் கூட்டணி இணையவுள்ளது உறுதியாகியுள்ளது. தற்போது, திரைக்கதை விவாதத்தில் இருப்பதுபோல் குறிப்பிட்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் கங்குவா வெளியீட்டிற்குப் பின் துவங்கலாம் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ஏப்.10-ல் கருப்பு வெளியீடு? இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கருப்பு படத்தின் தயாரிப்பாளருக்கும் ஆர்.ஜே. பாலாஜிக்கும் சண்டையா?
கருப்பு வெளியீட்டை மீண்டும் உறுதிசெய்த ஆர். ஜே. பாலாஜி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

