தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

நித்திலன் - நயன்தாராவின் மகாராணி! அறிவிப்பு எப்போது?

Published On :

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் - நடிகை நயன்தாரா கூட்டணி உறுதியாகியுள்ளதாகத் தகவல்.

குரங்கு பொம்பை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நித்திலன் சாமிநாதன். குறைந்த பட்ஜெட்டில் உருவான அப்படம், ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றதுடன் நல்ல படம் என்கிற பெயரையும் ஈட்டியது.

பின், 7 ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய் சேதுபதியை வைத்து மகாராஜா திரைப்படத்தை இயக்கினார். இப்படமும் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இரண்டே படங்களில் பெரிய உச்சத்திற்கு சென்ற நித்திலன், அடுத்ததாக யாரை இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடிகை நயன்தாரா.

நடிகை நயன்தாரா.

தொடர்ந்து, பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதையை நித்திலன் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதில் நாயகியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியிருந்தது. இதனை, பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு மகாராணி எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது, இப்படத்திற்காக இயக்குநர் நித்திலன் தன் குழுவினருடன் திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.