/

கூலி - சென்னை படப்பிடிப்பில் அமீர் கான்?

சென்னையில் கூலி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது...

News image

அமீர் கான்.

Updated On :15 அக்டோபர் 2024, 9:16 am

DIN


நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி திரைப்படத்தில் நடிகர் அமீர் கான் நடிக்க உள்ளதாகத் தகவல்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திடீர் உடல்நிலை காரணமாக ரஜினிகாந்த் ஓய்வெடுத்து வருகிறார். இதனால், சில நாள்களுக்கு படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதற்கிடையே, கூலியில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடிகர் அமீர் கான் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

தற்போது, இத்தகவல் உண்மைதான் என்றும் கூலி படத்தின் இரண்டாம் கட்ட சென்னை படப்பிடிப்பில் அமீர் கான் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. கூலி, எல்சியூ திரைப்படம் இல்லை என லோகேஷ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.