பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!

55-ஆவது இந்திய திரைப்பட விழா: 25 படங்களில் ஒரேயொரு தமிழ்ப்படம்!

இந்திய திரைப்பட விழாவில் தமிழ்ப்படமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தேர்வாகியுள்ளது.

35 சின்ன கத காது (தெலுங்கு), பிரம்மயுகம் (மலையாளம்), ஜிகர்தண்டா (தமிழ்).

Published On :

இந்திய திரைப்பட விழாவில் தமிழ்ப்படமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் தேர்வாகியுள்ளது.

கோவாவில் வரும் நவ.20 முதல் 28ஆம் தேதி வரை இந்திய திரைப்பட விழா நடைபெறவிருக்கிறது. முதல் படமாக ரந்தீப் ஹூடா நடித்த சாவர்க்கர் படம் திரையிடப்படுகிறது.

இந்தியன் பனோரமா திரைப்பட விழாவில் 20 திரைப்படங்கள் திரையிட தேர்வாகியுள்ளது. இதில் தமிழில் இருந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மட்டுமே தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் ஒரே படமாக நடிகை நிவேதா தாமஸ் நடித்த 35 சின்ன கத காது படம் தேர்வாகியுள்ளது.

மலையாளத்தில் 3 படங்கள் தேர்வாகியுள்ளன. அமலா பால் - ஆசிப் அலியின் லெவல் கிராஸ், மம்மூட்டியின் பிரம்மயுகம், பிருத்விராஜின் ஆடுஜீவிதம் படங்களும் தேர்வாகியுள்ளன.

இதேபோல ஆவண குறும்படங்களும் 20 படங்கள் தேர்வாகியுள்ளன.

வணிக சினிமா பிரிவில் 12த் பெயில், மஞ்சுமெல் பாய்ஸ், கல்கி 2898 ஏடி, ஸ்வார்கரத், கர்கானு ஆகிய படங்களும் தேர்வாகியுள்ளன.

தேர்வான படங்கள்.

தேர்வான படங்கள். - படம்: பிஐபி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.