ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

டொராண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பை பெற்ற 'ஹாஃப்'

டொரண்டோ சிறப்பு திரையிடலில் கவனம் பெற்ற ஹாஃப்...

Published On :

மலையாளத்தில் தயாரிக்கப்பட்ட ஹாஃப் திரைப்படம் டொரண்டோ திரைப்பட விழாவில் கவனம் பெற்றுள்ளது.

சம்ஜாத் பி. எஸ். இயக்கத்தில் உருவான 'ஹாஃப்' (HALF) திரைப்படம், புகழ்பெற்ற டொரண்டோ சர்வதேச திரைப்பட விழா (TIFF) வழங்கும் 'மிட்நைட் மேட்னஸ்' (Midnight Madness) பிரிவில் திரையிடப்பட்டு மலையாள சினிமா வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது.

இந்த பிரிவில் தேர்வாகி திரையிடப்பட்ட முதல் மலையாள திரைப்படம் என்ற பெருமையை 'ஹாஃப்' பெற்றுள்ளது. திரையரங்கில் படம் திரையிடப்பட்ட தருணம் முதல், அதை தொடர்ந்து நடந்த கலந்துரையாடல் (Q&A) வரை பார்வையாளர்கள் வரவேற்பைக் கொடுத்துள்ளனர்.

'ஃபிராக்ரண்ட் நேச்சர் ஃபிலிம் கிரியேஷன்ஸ்' (Fragrant Nature Film Creations) பேனரில் ஆன் சஜீவ் மற்றும் பி. கே. சஜீவ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், தீவிரமான கதைக்களத்தில் வழக்கத்திற்கு மாறான காட்சி அமைப்பினால் சர்வதேச பார்வையாளர்களைக் கவர்ந்ததாகக் கூறப்படுகிறது.

Story image

திரையிடலுக்கு பிறகு நடைபெற்ற கேள்வி - பதில் அமர்வில், இயக்குநர் சம்ஜாத், தயாரிப்பாளர்கள் ஆன் சஜீவ் & பி.கே. சஜீவ், முதன்மை நடிகர்கள் ரஞ்சித் சஜீவ் & ஐஸ்வர்யா ராஜ், இசையமைப்பாளர் மிதுன் முகுந்தன் மற்றும் ஒலி வடிவமைப்பாளர் விஷ்ணு கோவிந்த் ஆகியோர் கலந்துகொண்டனர். இப்படம் விரைவில் இந்தியத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

The Malayalam film Half has garnered attention at the Toronto Film Festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.