
நடிகர் ரவி மோகனின் புதிய திரைப்படம்!
நடிகர் ரவி மோகன் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்து...

நடிகர் ரவி மோகனின் புதிய திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரவி மோகன் நடித்த கராத்தே பாபு திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து ப்ரோ கோட், பென்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடிப்பதுடன், இயக்குநராக ஆன் ஆர்டினரி மேன் (An ordinary man) என்கிற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இதில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்க, ரவி மோகனே தயாரிக்கவும் செய்கிறார்.
இந்த நிலையில், நடிகர் ரவி மோகன் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். ஜிஎன்டி ஷியாகுமார் இயக்கும் இப்படம் 2027 ஆம் ஆண்டு கோடையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு போஸ்டரில் கருப்பு வெள்ளை தோற்றத்துடன் இங்க் மற்றும் ரத்தத்தால் உருவான உலகம் எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனால், இப்படம் கிரைம் திரில்லராக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.
Actor Ravi Mohan's new film has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






