மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வருங்கால கணவருடன் ரம்யா பாண்டியன் - விடியோ!

நடிகை ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணம்...

News image
Updated On :27 அக்டோபர் 2024, 7:31 am

நடிகை ரம்யா பாண்டியன் தன் வருங்கால கணவருடனான விடியோவை வெளியிட்டுள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியன், 'டம்மி பட்டாசு’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ஜோக்கர், நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். குறைவான படங்களில் நடித்தாலும் பெயர் சொல்லக் கூடிய கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிப்பவர்.

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன் புகைப்படங்களை வெளியிடுவார். சில ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்டாவிலேயே பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தவர். ஆனால், தற்போது புதுப்புது நாயகிகளின் வருகையால் பெரிய கவனம் கிடைக்காமல் இருக்கிறார்.

சில நாள்களுக்கு முன், ரம்யா பாண்டியனுக்கும் யோகா மாஸ்டரான லவல் தவானுக்கும் விரைவில் திருமணமாகவுள்ளதாகத் தகவல் வெளியானது.

பெங்களூருவில் உள்ள லவல் தவானின் யோகா மையத்தில் கடந்தாண்டு யோகா கற்க ரம்யா பாண்டியன் இணைந்துள்ளார். சில மாதங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் உத்தரகண்டில் உள்ள ரிஷிகேஷில் நவம்பர் மாதம் திருமணம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து, சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்வை நடத்தவும் திட்டமிட்டுள்ளனராம்.

இந்த நிலையில், தன் வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட விடியோவை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ளார். இதனால், இருவருக்கும் திருமண நடைபெறவுள்ளது உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.