கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆர்ஜே பாலாஜியின் ஹேப்பி எண்டிங்!

ஆர்ஜே பாலாஜி நடிக்கும் ஹேப்பி எண்டிங் திரைப்படத்தின் முதற்பார்வை டீசர் வெளியாகியுள்ளது.

News image

ஹேப்பி எண்டிங்

Dinamani

Updated On :31 அக்டோபர் 2024, 1:12 pm

DIN

நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிக்கும் புதிய படமான ஹேப்பி எண்டிங் திரைப்படத்தின் முதற்பார்வை டீசர் இன்று வெளியாகியுள்ளது.

ஆர்ஜேவாக இருந்து தற்போது இயக்குநராகவும், நடிகராகவும் அறியப்படுபவர் ஆர்ஜே பாலாஜி. நயன்தாரா நடிப்பில் இவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இவர் அடுத்ததாக, நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை இயக்க உள்ளார். இதற்கிடையே, அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் சொர்க்கவாசல் என்கிற படத்திலும் ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார்.

சொர்க்கவாசல் திரைப்படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியாகி கவனத்தைப் பெற்றது.

இந்த நிலையில், அவர் நடிக்கும் அடுத்த படமான ‘ஹேப்பி எண்டிங்’ திரைப்படத்தின் டைட்டில் முதற்பார்வை டீசர் இன்று வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அம்மமுத்து சூர்யா இயக்கியுள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.