ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இதில், நடிகர்கள் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
வேட்டையன் படத்தின் முதல் பாடல் ‘மனசிலாயோ’ சமீபத்தில் வெளியாகி 20 மில்லியன் (2 கோடி) யூடியூப் பார்வைகளைக் கடந்துள்ளது.
நேற்று, துஷாரா விஜய் ‘சரண்யா’ கதாபாத்திரத்திலும், ரித்திகா சிங் ’ரூபா’ கதாபாத்திரத்திலும் நடிகை மஞ்சு வாரியர் ‘தாரா’ கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக படக்குழு விடியோ வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், படத்தின் அடுத்த பாடலின் புரோமோவை வெளியிட்டுள்ளார். இதில் அனிருத் தீயாகா பாடல் பாடுகிறார். ஹண்டர் வந்துட்டார் எனத் தொடங்கும் இந்தப் பாடல் இன்னொரு ஹுகும் பாடலாக இருக்குமென ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஜெயிலர் படத்தில் வெளியான ஹுக்கும் பாடல் மிகவும் பிரபலமானதுடன் சர்சையானதும் குறிப்பிடத்தக்கது. அதே மாதிரி இந்தப் பாடலிலும் சூப்பர் ஸ்டார் குறித்த வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.