காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

இந்தியாவின் அடுத்த ஏஆர் ரஹ்மான் அனிருத்..! ஜூனியர் என்டிஆர் புகழாரம்!

நடிகர் ஜூனியர் என்டிஆர் அனிருத்தை இந்தியாவின் அடுத்த ஏஆர். ரஹ்மான் எனப் புகழ்ந்து பேசியுள்ளார்.

அனிருத், ஜூனியர் என்டிஆர்

Published On :

ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது, ஜூனியர் என்டிஆர் தனது 30வது படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரபல தெலுங்கு இயக்குநர் கொரடால சிவா இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ‘தேவரா -1’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஜான்வி கபூர், சயிப் அலிகான், நந்தமுரி கல்யாண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ளார். தேவரா செப். 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் ஜூனியர் என்டிஆர் அனிருத் பற்றி பேசியதாவது:

எனக்கு இசை என்றால் மிகவும் பிடிக்கும். அனிருத்தின் திறமை மிகவும் அற்புதமானது. மெல்லிசை பாடல் வேண்டுமென்றால் வேற லெவலில் தருகிறார். நாயகனை உயர்த்திப்பிடிக்க வேண்டிய பாடல் என்றாலும் நடனாமாட பாடல் வேண்டுமானலும் தருகிறார்.

திறமையில்லாவிட்டால் இவ்வளவு சூப்பர் ஹிட் பாடல்களை அனிருத்தால் தரமுடிந்திருக்காது. இந்தியாவில் இன்று அதிகமாக அவரது இசையை விரும்புகிறார்கள்.

தென்னிந்தியாவில் இளையராஜா சார், கீரவாணி சார், ரஹ்மான் சார் என பலர் சிறப்பான இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். தற்போது, அனிருத் இந்த இடத்தைப் பிடித்துவிட்டார். அவரிடம் அதிகமான திறமைகள் இருக்கின்றன.

அனிருத் மெதுவாக இந்தியாவின் ஏ.ஆர்.ரஹ்மானாக மாறிவருகிறார். அத்தான் நான் நினைப்பதும். நீங்கள் தேவரா படத்தின் பாடல்களைக் கேட்டிருப்பீர்கள். அவரது இதயத்தையும் ஆன்மாவையும் கொண்டு இசையமைத்துள்ளார். பின்னணி இசைக்காக காத்திருக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.