
பிரபல திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது சமீபத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஜானி மாஸ்டர் கோவாவில் கைது செய்யப்பட்டார்.
21 வயதான பெண் உதவி நடன இயக்குநர் அளித்த புகாரின் பேரில் ஹைதராபாத்திலுள்ள ராய்துர்கம் பகுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை கோவாவில் வைத்து தெலங்கானா காவல்துறையினர் கைது செய்தனர். விரைவில் ஹதராபாத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இதையும் படிக்க: மொழி இல்லம்... கனவு நிறைவேறியது..! மிருணாளினி ரவி நெகிழ்ச்சி!
அருவருக்கத்தக்க குற்றச்சாட்டு
இந்நிலையில் தெலுங்கு சேனலுக்கு ஜானி மாஸ்டரின் மனைவி ஆயிஷா கூறியதாவது:
எனது கணவரைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். 16 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறுவது அறுவறுக்கத்தக்கது. அது உண்மையுமில்லை. பாதிக்கப்பட்டதாகக் கூறும் பெண்ணிடம் சரியான ஆதாரங்கள் இருக்கின்றனவா? குற்றச்சாட்டைக் கூறும்முன் அதைக் காண்பித்திருக்க வேண்டும்.
எனது கணவரின் நன்மதிப்புக்கு கலங்கம் விளைவிக்கவே இந்தச் சதி நடைபெற்றிருக்கிறது.
இதற்குமுன்பு ஏன் இதைச் சொல்லவில்லை. இதற்கு முன்பாக ஒருமுறை எனது கணவரைப் பாதிக்கப்பட்ட பெண் புகழ்ந்தும் பேசியிருந்துள்ளார். இப்போது மட்டும் ஏன் இப்படி சொல்ல வேண்டும் என்றார்.
இதையும் படிக்க: வேட்டையன்: ரஜினி கதாபாத்திர பெயர் என்ன?
யார் இந்த ஜானி மாஸ்டர்?
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாக்களில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வருபவர் ஜானி மாஸ்டர் என அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா.
அல்லு அர்ஜூனின் 'புட்ட பொம்மா...' புஷ்பா பாடல்களுக்கு நடனம் அமைத்தவர். தமிழில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற பாடல்களுக்கு நடன இயக்குநரும் இவரே ஆவார்.
சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் 'மேகம் கருக்காதா..' பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக தேசிய விருது வென்றிருந்தார்.