மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிரபாஸின் 24வது படம்: முதல் பார்வை போஸ்டர் எப்போது?

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் அறிமுக போஸ்டர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :13 ஜனவரி 2024, 10:03 am

DIN

பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி ரூ.700 கோடிக்கும் மேல் வசூலித்து வருகிறது. 

Story image

சலார் படத்துக்குப் பிறகு கல்கி படத்தில் நடித்து வருகிறார். இன்னும் 20 நாள்கள் படப்பிடிப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பிரபாஸின் 24வது படத்தின் தலைப்பு, முதல் தோற்றப் பார்வை போஸ்டர் வரும் பொங்களுக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்திருந்தது. 

படத்தில் நடித்துள்ள மற்றவர்கள் குறித்து படக்குழு விவரங்களை எதுவும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஃபீபுள் மீடியா பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தினை மருதி இயக்கி வருகிறார்.

Story image

இந்நிலையில் படத்தின் தலைப்பு, முதல் பார்வை போஸ்டர் ஜன.15ஆம் நாள் காலை 7.08 மணிக்கு வெளியாகுமென படக்குழு தெர்வித்துள்ளது. 

Story image

பிரபாஸின் 25வது படம் அனிமல் இயக்குநர் சந்தீப் வங்கா இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.