அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து புறப்பட்டார்.
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமா் சிலை பிரதிஷ்டை வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இந்த கோலாகல நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி உள்பட 8,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினா்கள் பங்கேற்க உள்ளனா்.
இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதையொட்டி, பாஜக, ஆா்எஸ்எஸ் சாா்பில் பொதுமக்களுக்கும், பல்வேறு முக்கிய பிரமுகா்களுக்கும் அயோத்தி ராமஜென்மபூமி அறக்கட்டளை சாா்பில் அனுப்பப்பட்ட அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, அக்ஷய் குமார், கங்கனா ரணாவத், டைகர் ஷெராஃப், ஜாக்கி ஷெராஃப், ஹரிஹரன், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் ரந்தீப் ஹூடா உள்ளிட்ட பல திரைபிரபலங்களுக்கு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து புறப்பட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நாளை நடைபெறும் அயோத்தி கோயில் கும்பாபிஷேகம் வரலாற்றில் மறக்க முடியாத நாள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குரல் அழைப்பு தரத்தை மதிப்பிட மேம்பட்ட ‘மைகால்’ செயலி: ட்ராய் அறிமுகம்

தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்பு

நேபாளம்: மதக் கலவரத்தால் பாதித்த மாவட்டங்களில் திரும்பிய இயல்புநிலை

உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



