வாடிவாசல் படப்பிடிப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
'கங்குவா' படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெற்றி மாறன் 'விடுதலை - 2' படப்பிடிப்பில் தீவிரமாக இருந்தார்.
இதனால், 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்த சூர்யா, அடுத்தாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
தற்போது, இயக்குநர் வெற்றிமாறனும் 'விடுதலை - 2' வெளியானதைத் தொடர்ந்து, 'வாடிவாசல்' திரைப்படத்தின் பணிகளைத் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்கும் என தயாரிப்பாளர் தாணு தெரிவித்திருந்தார். ஆனால், சில காரண்ங்களால் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: குட் பேட் அக்லி - திரைகள், காட்சிகள் அதிகரிப்பு!