வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

மகளின் புகைப்படத்தைப் பகிர்ந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!

ரித்திகா தமிழ்ச்செல்வி, தனது குழந்தையின் முகத்தைக் காட்டும் வகையிலான புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

மகளுடன் ரித்திகா - இன்ஸ்டாகிராம்

Published On :

பாக்கியலட்சுமி தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ரித்திகா தமிழ்ச்செல்வி, தனது குழந்தையின் முகத்தைக் காட்டும் வகையிலான புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஆண்டு இவருக்கு குழந்தை பிறந்த நிலையில், தமிழ்ப் புத்தாண்டையொட்டி தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்ன திரையில் அறிமுகமானவர் ரித்திகா. இதனைத் தொடர்ந்து சிவா மனசுல சக்தி, சாக்லேட், திருமகள் என அடுத்தடுத்து நடித்திருந்தாலும், பாக்கியலட்சுமி தொடரின் மூலம் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

இத்தொடரில் அம்ரிதா என்ற பாத்திரத்தில் பல நடிகைகள் தற்போது மாறியிருந்தாலும், முதலில் ரித்திகாவே இந்தப் பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்தத் தொடரில் கிடைத்த புகழின் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தார். கேபிஒய் பாலா உடன் சேர்ந்து இவர் பங்கேற்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

இதனிடையே விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்த வினு என்பவரை கடந்த 2022ஆம் ஆண்டு இவர் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு கடந்த ஆண்டு நவம்பரில் பெண் குழந்தை பிறந்தது.

குடும்பத்துடன் ரித்திகா

குடும்பத்துடன் ரித்திகா - இன்ஸ்டாகிராம்

குழந்தை பிறந்ததும் குழந்தை உடன் இருக்கும் படங்களை வெளியிட்ட ரித்திகா, முதல்முறையாக தற்போது குழந்தையின் முகத்தைக் காட்டும் வகையிலான படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது கணவர் உடன் குழந்தையை வைத்துக்கொண்டு, தனது ரசிகர்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.