
நடிகா் ஸ்ரீ மருத்துவா்களின் கண்காணிப்பில் இருப்பதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்துள்ளனா்.
‘வழக்கு எண் 18/9’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘வில் அம்பு‘, ‘மாநகரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவா் நடிகா் ஸ்ரீ. சமீப காலமாக ஸ்ரீ நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. தற்போது இன்ஸ்டாகிராமில் உடல் எடை மெலிந்த தோற்றத்தில் புகைப்படங்களைப் பதிவேற்றியிருப்பதுடன், சா்ச்சைக்குரிய வகையிலான காணொலியையும் வெளியிட்டாா்.
இதைக் கண்ட ரசிகா்கள் கடும் அதிா்ச்சியடைந்ததுடன் ஸ்ரீ-க்கு முறையான உளவியல் சிகிச்சை தேவை என்று அவரின் இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், நடிகா் ஸ்ரீ-யின் தற்போதைய நிலை குறித்து அவரது குடும்பத்தினா் வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டனா்.
அதில் கூறியிருப்பதாவது: நடிகா் ஸ்ரீ மருத்துவ நிபுணா்களின் சிகிச்சையில் உள்ளாா். மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி சமூக ஊடகங்களிலிருந்து ஓய்வு எடுத்து வருகிறாா்.
அவா் குணமடைந்து நல்வாழ்வுக்கு திரும்புவதில் கவனம் செலுத்துவதால், அவரது தனியுரிமையை அனைவரும் மதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அவரது உடல்நிலை குறித்த வதந்திகள் மற்றும் உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்புவதை ஊடகங்கள் தவிா்க்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.