
நடிகர் கமல் ஹாசன் தேசிய விருதுகள் வென்ற பார்க்கிங் திரைப்பட குழுவினரை வாழ்த்தினார்.
அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா உள்ளிட்டோர் நடிப்பில் 2023-ல் வெளியான திரைப்படம் பார்க்கிங். வாடகை வீட்டில் இருக்கும் இருவர் கார் பார்க்கிங் செய்வதால் ஆணவச் சீண்டலுக்கு ஆளாகும் கதையை உணர்ச்சிப்பூர்வமாக பேசியிருந்தது.
திரையரங்கு வெளியீட்டிலேயே பாராட்டுகளைப் பெற்ற இப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, 71-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்ப்பட விருதையும், சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பார்க்கிங் பெற்றுள்ளது.
மேலும், தமிழில் சிறந்த துணை நடிகருக்கான விருதை படத்தின் இரண்டாம் கதைநாயகன்போல் வலம்வந்த எம்.எஸ். பாஸ்கர் வென்றுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரே தமிழ்த் திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
இந்த நிலையில், பார்க்கிங் படக்குழுவினர் நடிகர் கமல் ஹாசனை அவரின் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். சந்திப்பில் இயக்குநர் ராம்குமார், நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், இந்துஷா உள்ளிட்டோர் இருந்தனர்.
இதையும் படிக்க: சொந்த வீடு இல்லாதது குற்றமா? 3 பிஎச்கே சொல்ல வருவது என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.