

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரோரா - கமருதீன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 8வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தின் கேப்டனாக ரம்யா ஜோ உள்ளார்.
முன்னதாக, போட்டியிலிருந்து வெளியேறிய நடிகை ஆதிரை மீண்டும் நிகழ்ச்சிக்குள் வந்துள்ளார். இவர் வந்ததும் விளையாட்டில் பல திருப்புமுனைகள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆதிரை, அரோரா, பார்வதி மற்றும் கமருதீன் இடையே தொடர் வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது, அரோரா காலில் விழுந்த கமருதீன் விழுகிறார்.
இந்த விடியோ இன்று(டிச. 5) வெளியான முன்னோட்டக் காட்சியில் காண்பிக்கப்பட்டுள்ளது. என்ன பிரச்னை என்பது குறித்த முழுமையான தகவல்கள் இன்றிரவு வெளியாகும் எபிசோடில் தெரியவரும்.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற 11 பேர் நாமினேட் ஆகி உள்ளனர். ரம்யா தலைவர் ஆனதால் அவரை நாமினேட் செய்ய முடியாது. அரோரா, ஆதிரை, வியானா ஆகியோரும் நாமினேஷனில் இருந்து தப்பினர்.
மற்ற 11 பேருக்கும் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில், குறைந்த வாக்குகளைப் பெற்றவர், போட்டியிலிருந்து இந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார்.
இதையும் படிக்க: மீண்டும் அஜித்தை இயக்கும் சிவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.