

ஜப்பான் நாட்டில், ‘பாகுபலி: தி எபிக்' திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் பிரபாஸ் படம் பார்த்துள்ளார்.
நடிகர் பிரபாஸ் நாயகனாக நடித்து இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகிய ‘பாகுபலி 1’ மற்றும் ‘பாகுபலி 2’ ஆகிய திரைப்படங்கள் கோடிகளில் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றன.
இத்துடன், வரலாற்று கதைகளத்துடன் உருவான இப்படங்களுக்கு உலகளவில் தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. இதையடுத்து, இவ்விரண்டு திரைப்படங்களையும் இணைத்து ‘பாகுபலி: தி எபிக்’ எனும் முழு நீளப் படத்தை படக்குழுவினர் வெளியிட்டனர்.
இந்தப் படமும் வெற்றி பெற்ற நிலையில், பாகுபலி: தி எபிக் திரைப்படம் வரும் டிச.12 ஆம் தேதி ஜப்பான் நாட்டில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், ஜப்பான் நாட்டில் திரையிடப்பட்ட பாகுபலி: தி எபிக் படத்தின் சிறப்பு காட்சியில் கலந்து கொண்ட நடிகர் பிரபாஸ் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்துள்ளார்.
இதையடுத்து, ரசிகர்களுடன் பேசிய நடிகர் பிரபாஸ், “ஜப்பான் வந்து உங்கள் அனைவரையும் நேரில் சந்திப்பது எனது கனவு. இனிமேல், ஆண்டுக்கு ஒருமுறை ஜப்பான் வந்து உங்களை சந்திக்க வேண்டும் என விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்கும் நெட்பிளிக்ஸ்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.