

நெட்பிளிக்ஸ் நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில் முன்னணியில் இருக்கும் தயாரிப்பு, விநியோக நிறுவனமான வார்னர் பிரதர்ஸை (Warner bros) விற்பனை செய்ய அதன் உரிமையாளர்கள் முடிவு செய்திருக்கிறார்களாம்.
திரைப்படங்களைத் தயாரித்து பல ஆயிரம் கோடிகளை ஈட்டிய வார்னர் பிதர்ஸ் விற்பனைக்கு வருவதால் அதனை வாங்க பல நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன.
இப்போட்டியில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் இணைந்ததுடன் இந்திய மதிப்பில் ரூ. 8000 கோடிக்கு வாங்க பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனராம்.
வார்னர் பிரதர்ஸைக் கைப்பற்றினால் பல நூறு திரைப்படங்களும் எச்பிஓ மற்றும் டிஸ்கவரி சேனலும் கிடைக்கும் என்பதால் ஓடிடியில் பெரிய வருவாயை ஈட்டலாம் என நெட்பிளிக்ஸ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்னும் சில நாள்களில் பேச்சுவார்த்தை முடியலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: மீண்டும் அஜித்தை இயக்கும் சிவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.