

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் நடிகை திவ்யாவும் நடிகர் அமித் பார்கவும் நீதிபதிகளாக பொறுப்பேற்றுள்ளனர்.
நிஜ வாழ்வில் வழக்குரைஞரான அமித் பார்கவ், சட்ட மாணவியான திவ்யா இருவரும் நீதிபதிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது பொருத்தமானது என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 10வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் அமித் பார்கவ் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.
இந்த வாரத்திற்கு நீதிமன்றமும் வழக்குகளும் என்ற போட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் இருவர் மீது வழக்கு தொடரலாம். அந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி உண்மை யார் பக்கம் உள்ளது என்று தீர்ப்பு வழங்க வேண்டும்.
இந்த டாஸ்க்கில் அமித் பார்கவ், திவ்யா கணேசன் ஆகியோர் நீதிபதிகளாக பொறுப்பேற்றுள்ளனர். நிஜவாழ்வில் இருவரும் சட்டத் துறையைச் சேர்ந்தவர்கள். அமித் பார்கவ் வழக்குரைஞர். திவ்யா கணேசன் சட்ட மாணவி எனக் கூறப்படுகிறது.
சட்டத் துறையைச் சேர்ந்தவர்களை நீதிபதிகளாகப் பொறுப்பேற்றுள்ளது வரவேற்கத்தக்கது என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதனால் இந்தப் போட்டியில் பல சுவாரசியமான நிகழ்வுகள் அரங்கேறும் என்றும் பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இருக்காது என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். எனினும், விஜே பார்வதி உள்ளிட்டோர் டாஸ்க்கை கெடுக்கும் வகையில் செயல்படுவதாகவும் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | அழுதாலும், சிரித்தாலும் நட்பே துணை! பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் சந்திப்பு!
இதையும் படிக்க | பார்வதி, கமருதீனால் ஒட்டுமொத்த பிக் பாஸ் வீட்டுக்கும் தண்டனை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.