சுந்தர். சி பிறந்தநாளில் ‘வல்லான்’ என்ற புதிய படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இதில் சுந்தர் சி உடன் தன்யா ஹோப், ஹெபாப் படேல், அபிராமி வெங்கடாசலம் நடித்துள்ளார்கள்.
விஆர் மணி செய்யோன் எழுதி இயக்கியுள்ள வல்லான் படத்தினை விஆர் மணிகண்டன், வி. காயத்ரி இணைந்து தயாரித்துள்ளார்கள்.
சமீபத்தில் சுந்தர். சி இயக்கத்தில் வெளியான மதகஜராஜா படம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து வல்லான் படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஆக்ஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவாகியுள்ள வல்லான் படம் வரும் ஜன.24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
நடிகராக சுந்தர். சி கடைசியாக அரண்மனை 4இல் நடித்திருந்தார். மேலும் 2 படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வல்லான் போஸ்டர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இங்கிலாந்து ஓடிஐ தொடரிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்!

எந்த இடத்தில் களமிறங்கினாலும் எனக்கு மகிழ்ச்சியே: வாஷிங்டன் சுந்தர்
அருள்நிதி நடித்துள்ள அருள்வான் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ்!
24 ஆண்டுகளுக்குப் பின்... விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



