சசிகுமாரின் ஃப்ரீடம் டிரைலர்!

ஃப்ரீடம் டிரைலர் வெளியானது....
சசிகுமாரின் ஃப்ரீடம் டிரைலர்!
Published on
Updated on
1 min read

சசிகுமார் நடிப்பில் உருவான ஃப்ரீடம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

கழுகு படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் இணைந்துள்ள இப்படத்திற்கு 'ஃப்ரீடம் ஆகஸ்ட் - 14’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இப்படம் தமிழகத்தில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் குறித்த உண்மைக் கதைகளைத் தொட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், சசிகுமாரும் லிஜோமோல் ஜோஸும் இலங்கை அகதிகளாக நடித்திருக்கின்றனர்.

இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் சந்திக்கும் பிரச்னைகள் காட்டப்படுவதால் படம் அரசியல் ரீதியாகவும் சில விஷயங்களைப் பேசலாம் எனத் தெரிகிறது.

இந்தப்படம் ஜூலை 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றிக்குப் பின் வெளியாகும் சசிகுமார் படமென்பதால் ஃப்ரீடம் மீது எதிர்பார்ப்பு ஏழுந்துள்ளது.

Summary

actor sasikumar's freedom movie trailer out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com