
பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் நாயகனாக நடித்துள்ள பலடி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஷேன் நிகம். தற்போது, நாயகனாகவும் கவனம் பெற்று வருகிறார்.
தமிழில் மெட்ராஸ்காரன் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருந்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
ஷேன் நிகம் தன் 25-வது படதமான பல்டி படத்தில் நடித்துள்ளார். உன்னி சிவலிங்கம் இயக்கும் இப்படம் தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ளது.
சந்தோஷ் டி குருவில்லா இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இதில், கபடி வீரராக ஷேன் நடித்திருக்கிறார். படம் ஓணம் வெளீடாகத் திரைக்கு வருமெனக் கூறப்பட்டிருந்தது.
தற்போது, ஆக.29ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.