ஓஹோ எந்தன் பேபி படத்தின் வெளியீட்டுத் தேதி!
ஓஹோ எந்தன் பேபி படத்தின் வெளியீட்டுத் தேதி தொடர்பாக...


ஓஹோ எந்தன் பேபி படத்தின் வெளியீட்டுத் தேதி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷால் ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். சில தோல்விப் படங்களைக் கொடுத்தாலும் நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் நாயகனாகவே இருக்கிறார்.
இறுதியாக இவர் நடிப்பில் வெளியான, ‘கட்டா குஸ்தி’, ‘லால் சலாம்’ ஆகியவை வசூல் ரீதியான வெற்றியை அடைந்தது.

இதனிடையே, நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய தம்பி ருத்ராவை நாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.
ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு ‘ஓஹோ எந்தன் பேபி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தை அறிமுக இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்குகிறார். ஜென் மார்டின் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், ஓஹோ எந்தன் பேபி படம் திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சென்னையில் இளையராஜா சிம்பொனி கச்சேரி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...