தக் லைஃப் எப்படி இருக்கிறது? ரசிகர்கள் கருத்து! செய்திகள் நேரலை...

38 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ள மணிரத்னம் - கமல் கூட்டணி வெல்லுமா என்பது குறித்து...
தக் லைஃப் போஸ்டர்
தக் லைஃப் போஸ்டர்

வயதான கூட்டணி வெல்லுமா? 

38 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ள மணிரத்னம் - கமல் கூட்டணியில் தக் லைஃப் படம் உருவாகியுள்ளது.

உலகம் முழுவதும் நாளை (ஜூன்.5) வெளியாகும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தப் படத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி என முக்கியமான நடிகர், நடிகைகள் நடித்துள்ளார்கள்.

சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

தமிழக அரசு இந்தப் படத்துக்கு நாளை (ஜூன்.5) ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கான அனுமதியை வழங்கியுள்ளது.

இதன்படி நாளை காலை 9 மணிக்கு தக் லைஃப் திரைப்படம் தமிழகத்தில் வெளியாகிறது.

தக் லைஃப் போஸ்டர்
தக் லைஃப்: சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

ரன்னிங் டைம் 

இந்தப் படத்தின் ரன்னிங் டைம் (கால அளவு) 2 மணி நேரம் 45 நிமிஷம் 42 நொடிகள் இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. அதனால், சண்டைக் காட்சிகள் அதிகம் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

உயிரே, உறவே, தமிழே... தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி கூறிய கமல்!

கன்னட மொழி விவகாரத்தில் ஆதரவளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

“நான் மேடையில் பேசிய ’தமிழே, உறவே, உயிரே’ என்ற சொற்றொடரின் அர்த்தத்தை முழுமையாக புரிந்துகொள்கிறேன்” என செய்தியாளர் சந்திப்பில் கமல் நெகிழ்ச்சி.

தக் லைஃப் போஸ்டர்
உயிரே, உறவே, தமிழே... தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி கூறிய கமல்!

தக் லைஃப் மேக்கிங் விடியோ!

கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

தக் லைஃப் போஸ்டர்
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தக் லைஃப் மேக்கிங் விடியோ!

தக் லைஃப் வெளியானது

மணிரத்னம் இயக்கத்தில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

கன்னட மொழிப் பிரச்னை காரணமாக கர்நாடக மாநிலத்தில் மட்டும் தக் லைஃப் திரைப்படத்தின் வெளியீட்டை தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.

இதனால், கர்நாடகத்தில் உள்ள கமலின் ரசிகர்கள் ஓசூருக்கு படையெடுத்துள்ளனர்.

மாஸ் காட்டும் சிம்பு 

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு வெளியானது.

முதல் பாதி நிறைவடைந்துள்ள நிலையில், சிம்புவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதிகளவிலான மாஸ் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் ரசிகர்கள் விமர்சனத்தை பகிர்ந்துள்ளனர்.

தக் லைஃப் மாஸ்

நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படத்தின் முதல் காட்சி நிறைவடைந்துள்ள நிலையில், ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மணிரத்னமும் கமலும் இணைந்தால் எப்போதும் மாஸ்தான் என்று ரசிகர்கள் உற்சாகத்துடன் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், சிம்புக்கான கதாபாத்திரம் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதகாவும் சண்டை காட்சிகள் மிக அருமையாக இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கமல் - மணிரத்னம் சேராமலே இருந்திருக்கலாம்

38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் - மணிரத்னம் இணைந்திருக்க வேண்டாம் என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

முதல் பாதியில் சிம்புக்கும் இரண்டாம் பாதியில் கமலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சென்றுவிட்டதாக ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com