தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

நீக்கப்பட்ட காட்சிகளுடன் சேர்த்து வெளியான விடுதலை - 2: எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

வெற்றி மாறன் இயக்கிய விடுதலை 2 படத்தின் 3.07 மணி நேர படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

News image
Updated On :7 ஜூன் 2025, 5:33 am

வெற்றி மாறன் இயக்கிய விடுதலை 2 படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளுடன் ‘டைரெக்டர் கட்’ வெர்ஷன் வெளியாகியுள்ளது.

நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை - 2 திரைப்படம் கடந்த டிச. 20 அன்று திரையரங்குகளில் வெளியானது.

இயக்குநர் வெற்றி மாறனின் 4 ஆண்டுகால படமாக உருவாகியுள்ள விடுதலை மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது.

பல திரைகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றதால் பெரிய வணிக வெற்றி சாத்தியமாகவில்லை எனக் கூறப்பட்டது.

இருப்பினும், இப்படம் ரூ. 50 கோடி வரை வசூலித்து வணிக ரீதியான தோல்வியிலிருந்து மீண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

விடுதலை திரைப்படத்துக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.

இதற்கு முன்பாக 2 மணி நேரம் 37 நிமிஷங்கள் திரையில் வெளியாகிய வெர்ஷன் ஜனவரியில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது.

தற்போது, நீக்கப்பட்ட காட்சிகளுடன் 3 மணி நேரம் 7 நிமிஷங்களுடன் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.