காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஆர்யாவின் புதிய பட பெயர்!

நடிகர் ஆர்யாவின் 36-வது படத்தின் பெயர் டீசர் வெளியானது...

Published On :

நடிகர் ஆர்யா நடிக்கும் அவரது 36-வது படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஆர்யா மிஸ்டர் எக்ஸ் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து சார்பட்டா இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார். தற்போது, ஆர்யாவின் 36-வது பட அறிவிக்கப்பட்டுள்ளது.

மினி ஸ்டூடியோஸ் வினோத் குமார் தயாரிக்கும் இப்படத்தை ரன் பேபி ரன் படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார்.

எம்புரான் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிய முரளி கோபி இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். காந்தாரா படத்தின் இசையமைப்பாளர் அக்னிஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

Story image

இப்படத்திற்கு, 'அனந்தன் காடு’ எனப் பெயரிட்டுள்ளதை இன்று டீசர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். காட்சிகளைப் பார்த்தால், ஆர்யா இப்படத்தில் அதிகாரத்திற்கு எதிரான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகத் தெரிகிறது.

இதில், முக்கிய கதாபாத்திரங்களில் நிகிலா விமல், இந்திரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.