நடிகர் கமல்ஹாசனின் 237-வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தக் லைஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
இப்படத்திற்கான கதையை கமல்ஹாசனே எழுதியுள்ளார். மேலும், அமெரிக்கா சென்று ஏஐ தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொண்டதால் இப்படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் பங்கு இருக்கலாம் எனத் தெரிகிறது.
தக் லைஃப் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததாலும் வணிக ரீதியாக வசூலையும் ஈட்டவில்லை என்பதாலும் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் கமல் - 237 படத்தின் படப்பிடிப்பு தாமதமாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியன் - 2, தக் லைஃப் படங்களால் கிடைத்த எதிர்மறை விமர்சனங்கள் இப்படத்தைப் பாதிக்கலாம் என்பதால் கமல் ஹாசன் என்ன முடிவெடுப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதையும் படிக்க: ஆர்யாவின் புதிய பட பெயர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அபிஷன் ஜீவிந் - சிவராஜ்குமார் படத்தின் படப்பிடிப்பு விடியோ!

விக்ரம் - 63 திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு!

இந்தாண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் எது தெரியுமா?

நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்த கான் சிட்டி ஓடிடி தேதி!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


