பல காரணங்களால் குபேரா சிறப்பான படம்: சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி குபேரா திரைப்படம் குறித்து கூறியதாவது...
Actress Sai Pallavi prise Kubera Film.
நடிகை சாய் பல்லவி. படம்: எக்ஸ் / சாய் பல்லவி.
Published on
Updated on
1 min read

நடிகை சாய் பல்லவி குபேரா திரைப்படம் பல வகைகளில் சிறப்பானது என தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவில் கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கமூலா இயக்கியுள்ளார். இதில் நாகார்ஜுனா பிரதான கதாபாத்திரத்திலும் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இந்தப் படம் பான் இந்தியப் படமாக உருவாகியுள்ள இந்தப் படம் இன்று (ஜூன் 20) திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் இந்தப் படம் குறித்து நடிகை சாய் பல்லவி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

குபேரா பல வகைகளில் சிறப்பான படம்! தனுஷ் சாரின் மாஸ்டர்கிளாஸ் நடிப்பு , சவாலான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து அதை எளிதாக திரையில் காண்பிக்கிறார்.

சேகர் கம்முலா சார் இயக்கத்தில் நாகார்ஜுனா அவர்களை பார்க்கும்போது விருந்தாக அமையும்.

டியர் ரஷ்மிகா, நமக்கு எல்லாருக்குமே தெரியும் சேகர் கம்முலா சார் பெண் கதாபாத்திரத்தை எவ்வளவு வலுவாக எழுதுவார் எனத் தெரியும். இது ரஷ்மிகாவுக்கு மறக்க முடியாத கதாபாத்திரமாக அமையும்.

ராக்ஸ்டார் டிஎஸ்பி அவர்களே, உங்களின் தொடர்ச்சியான வெற்றிப் படங்களின் வரிசையில் இந்தப்படமும் அமையும். உங்கள் தொப்பில் மற்றுமொரு இறக்காக இந்தப்படம் இருக்கும்.

சூரி, அஜய், ஸ்வரூப், படக்குழு அனைவரின் ரத்தமும் வியர்வையும் பாராட்டுகளாக மாறும்!

ஏசியன் சினிமாஸும் பரிசுத்த இதயமான சேகர் கம்முலா சாரும் இணைவது மகத்தான கூட்டணியாக இருக்கும்.

இந்தத் தலைமுறையின் உத்வேகம் நீங்கள் சேகர் கம்முலா சார். அதில் நானும் ஒருத்தி.

எனது குரு மகிழ்ச்சியாகவும் உடல் நலத்துடனும் இதுபோல் பல கதைகளை எடுக்கவும் வாழ்த்துகிறேன். இன்று அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்க வேண்டிக்கொள்கிறேன் என்றார்.

நடிகை சாய் பல்லவி சேகர் கம்முலா இயக்கத்தில் ஃபிடா, லவ் ஸ்டோரி ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com