சூர்யா - ஆர்.ஜே. பாலாஜி படத்தின் பெயர் அறிவிப்பு!
நடிகர் சூர்யாவின் 45-வது படத்தின் பெயர் வெளியீடு..

கருப்பு படத்தின் போஸ்டர்

கருப்பு படத்தின் போஸ்டர்
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில், த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட், நட்டி, சிவதா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் அறிமுகமாகியுள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு கோவை, சென்னை, ஹைதராபாத் பகுதிகளில் நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சூர்யாவுடன் த்ரிஷா நடனமாடும் பிரம்மாண்ட பாடல் காட்சி ஒன்று எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தை இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.
இந்த நிலையில், இப்படத்திற்கு ’கருப்பு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கருப்பு படத்தின் போஸ்டர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...