சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

வீர தீர சூரன் படத்தை வெளியிட அனுமதி!

வீர தீர சூரன் திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாக...

News image

வீர தீர சூரன் பட போஸ்டர்

Updated On :27 மார்ச் 2025, 10:04 am

DIN

வீர தீர சூரன் படத்தை வெளியிட தில்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

முழுநீள ஆக்‌ஷன் திரைப்படமான இது ஒரே நாள் இரவில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தைதான் முதலில் வெளியிடுகிறார்கள்.

படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு பி4யு என்ற நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்காக ஓடிடி உரிமத்தை பி4யு நிறுவனத்துக்கு தயாரிப்பாளர் எழுதிக் கொடுத்துள்ளார்.

ஆனால், ஓடிடி உரிமம் விற்கப்படாமலேயே படத்தை வெளியிடுவதாக தில்லி உயர்நீதிமன்றத்தில் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மார்ச் 27 காலை 10.30 மணிவரை வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது.

இதனால், வெளிநாடுகளில் இன்று வெளியாகவிருந்த வீர தீர சூரன் திரைப்படத்தின் காட்சிகளும், தமிழகத்தில் காலை 9 மணி காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று காலை தில்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், "வீர தீர சூரன் படத்தின் தயாரிப்பாளர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உடனடியாக ரூ.7 கோடி வழங்க வேண்டும். மேலும், இந்தப் படத்தின் ஓடிடி உரிமம் விற்கப்படுவதற்கு முன் படத்தை வெளியிட முன்வந்ததால் 48 மணி நேரத்திற்குள் இதுதொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், இந்தப் படத்தை வெளியிட 4 வாரங்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டது.

இதனிடையே, இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு செட்டில்மெண்ட் முடிவுக்கு வந்துள்ளதாகவும், ரூ. 2.5 கோடி ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படவுள்ளதாகவும் தயாரிப்பாளர் ஷிபு இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராஜி தெரிவித்தார்.

இதை ஏற்றுகொண்ட தில்லி உயர் நீதிமன்றம், இருதரப்பும் எழுத்துப்பூர்வ பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

மேலும், எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை 5 மணிக்குள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

வீர தீர சூரன் திரைப்படத்தின் அனைத்து பிரச்னைகளும் இன்று(மார்ச் 27) மாலைக்குள் தீர்க்கப்பட்டு, 6 மணிக் காட்சி வெளியிடப்படும் என்று தகவல் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.