இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ரஜினி, சூர்யா ரசிகர்கள் எங்களை ஏற்றுக்கொள்வதில்லை: சல்மான் கான்

ரஜினி, சூர்யா ரசிகர்கள் எங்களை ஏற்றுக்கொள்வதில்லை என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

News image
சல்மான் கான்- கோப்புப் படம்
Updated On :28 மார்ச் 2025, 2:13 pm

DIN

ரஜினி, சூர்யா ரசிகர்கள் எங்களை ஏற்றுக்கொள்வதில்லை என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

சிக்கந்தர் பட புரமோஷன் நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, ரஜினி, சிரஞ்சீவி, சூர்யா, ராம் சரண் போன்றோர் படங்கள் இங்கு வெளியாகும் போது நாங்கள் சென்று பார்க்கிறோம். அவை நன்றாக ஓடுகின்றன. ஆனால் என் படங்கள் அங்கு வெளியாகும் போது அவர்களின் ரசிகர்கள் சென்று பார்ப்பதில்லை. என்னைப் பார்க்கும் போது ரசிகர்கள் பாய், பாய் என்கிறார்கள்.

ஆனால் திரையரங்கிற்கு செல்வதில்லை. நாங்கள் இங்கு ஏற்றுக்கொள்வதைப் போல, எங்களை அங்கு ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களை திரையரங்குகளுக்கு இழுப்பது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது. எனது வாழ்வில் நான் தென்னிந்திய தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன்.

ஆனால், எனது படங்கள் தெற்கில் வெளியாகும்போது, ​​அவை அதே அளவிலான வெற்றியைப் பெறுவதில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் நீண்ட இடைவெளிக்குப் பின் பாலிவுட்டில் சிக்கந்தர் படத்தினை மீண்டும் இயக்கியுள்ளார். இதில் நடிகர் சல்மான் கான் நாயகனாகவும் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடிக்கின்றனர்.

படம் வரும் மார்ச் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.