காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

அடுத்தப்படம் இதுதான்: கார்த்திக் சுப்புராஜ்!

கார்த்திக் சுப்புராஜின் புதிய படம் குறித்து...

கார்த்திக் சுப்புராஜ்

Published On :

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன் அடுத்தப்படம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் உலகளவில் ரூ. 90 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற கார்த்திக் சுப்புராஜிடம், ‘உங்களின் அடுத்தப்படம் என்ன? எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு கார்த்திக் சுப்புராஜ், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்திற்குப் பின்பே சுயாதீன திரைப்படம் ஒன்றை குறைந்த பட்ஜெட்டில் புதுமுக நடிகர்களை வைத்து இயக்கும் திட்டத்தில் இருந்தேன். ஆனால், ரெட்ரோ படத்தால் அம்முயற்சி தள்ளிப்போனது.

அப்படத்தை எடுத்து திரைவிழாக்களுக்கு அனுப்பி பின் திரையரங்குகளில் வெளியிடலாம் எனத் திட்டமிட்டுள்ளேன். கதை தயாராகவே இருக்கிறது. ஒருவேளை என் அடுத்தப்படம் இதுவாகவும் இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.