நடிகர் ஜோஜு ஜார்ஜ் பணி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கி, நடித்த திரைப்படமான பணி கடந்தாண்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வெற்றியைப் பதிவு செய்தது.
ஆக்ஷன் பின்னணியில் உருவான படத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் கிளைமேக்ஸ் ஆகியவை ரசிகர்களைத் திருப்திபடுத்தியதால் படம் மலையாளம் மற்றும் தமிழிலும் வரவேற்பைப் பெற்றது. ரூ. 15 கோடியில் உருவான இப்படம் ரூ. 30 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக ஜோஜு ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் புதிய கதை, புதிய இடங்கள், புதிய கதாபாத்திரங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், முதல் பாகத்தில் நடித்த அபிநயா, சகர் சூர்யா, சுஜித் சங்கர் உள்ளிட்டோர் இரண்டாம் பாகத்தில் நடிப்பார்களா எனக் கேள்வி எழுந்துள்ளது.
இருப்பினும் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு ரசிகர்களிடம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: 10-ல் 5 கதை சூரிக்காகவே எழுதப்படுகிறது: லோகேஷ் கனகராஜ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








