இயக்குநர் நெல்சன் நடிகர் மோகன்லாலை படப்பிடிப்பில் சந்தித்துள்ளார்.
நடிகர் மோகன்லால் எம்புரான், துடரும் என அடுத்தடுத்த ஹிட் படங்களைக் கொடுத்து இந்தாண்டில் தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூலித்த நடிகர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
இதில், துடரும் திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தை மே 9 ஆம் தேதி தமிழிலும் வெளியிடுகின்றனர்.
தற்போது, சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிக்கும் ஹிருதயப்பூர்வம் படத்தின் படப்பிடிப்பு கேரளத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படப்பிடிப்பிற்குச் சென்ற இயக்குநர் நெல்சன் அங்கு மோகன்லாலைச் சந்தித்து ஜெயிலர் - 2 திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ள காட்சிகளை விவரித்துள்ளாராம்.
ஜெயிலர் முதல் பாகத்தில் மேத்யூ என்கிற கதாபாத்திரத்தில் அசத்திய மோகன்லால், இரண்டாம் பாகத்திலும் கலக்குவார் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
இதையும் படிக்க: பணி - 2 படத்தை இயக்கும் ஜோஜு ஜார்ஜ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.