

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் முறையாக ஒத்துழைக்காததால் பிக் பாஸும் குரல் வழியாக விளையாடினார்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் சேர்ந்து பிக் பாஸும் குரல் மூலம் விளையாடினார்.
போட்டிக்கான விதிகளையும் கருவையும் வகுத்துக் கொடுத்த பிறகும் அதனைப் பின்பற்றி போட்டியாளர்கள் விளையாடாமல் சண்டையிட்டுக்கொண்டிருந்ததால், பிக் பாஸும் போட்டியில் பங்கெடுத்து விளையாடினார்.
இதற்கு முந்தைய பிக் பாஸ் சீசன்களில் இதுபோன்று நடந்ததில்லை என்றும், ஆனால், இந்த சீசனில் எதையுமே புரிந்துகொள்ளாமல் போட்டியாளர்கள் சண்டையிட்டுக்கொண்டு இருப்பதாகவும் பிக் பாஸ் வருத்தம் தெரிவித்தார்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சாண்டி மாஸ்டரை சுட்டிக்காட்டி, நகைச்சுவை என்பது எப்படி இயல்பாக இருக்க வேண்டும், மற்றவர்களை புண்படுத்தாமல் அதனை வெளிப்படுத்துவது என்று பிக் பாஸ் குறிப்பிட்டார்.
அதோடு மட்டுமின்றி, கானா சாம்ராஜ்ஜியம் - தர்பீஸ் சாம்ராஜ்ஜியம் என்ற டாஸ்க்கில் போட்டியாளர்களுடன் சேர்ந்து பிக் பாஸும் குரல் வாயிலாக விளையாடினார்.
இரவு பகலாக தூங்காமல், மன்னர் கால கதாபாத்திரங்கள் கொடுத்து நகைச்சுவையான கருவையும் உருவாக்கிக் கொடுத்த பிறகு நடிகர்களான நீங்கள் அதனை முன்னெடுத்துச்செல்லாமல் இருப்பதால், குரல் வாயிலாக நான் வழிநடத்துகிறேன் எனக் குறிப்பிட்டு போட்டியிலும் கலந்துகொண்டார்.
பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளவர்களில் பலர் நடிகர்களாக இருப்பதால், இது அவர்களுக்கு பெரும் கறையாகவே அமைந்துள்ளது என்று ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற மாட்டாய்! அரோராவுக்கு குவியும் பாராட்டுகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.