ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

10 கோடி பார்வைகளைக் கடந்த ஊறும் பிளட்!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ஊறும் பிளட் பாடல்

News image
Updated On :23 நவம்பர் 2025, 1:51 pm IST

டியூட் திரைப்படத்தில் இடம்பெற்ற ஊறும் பிளட் பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கூட்டணியில் வெளியான “டியூட்” திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் 2கே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமானதுடன் ரூ. 140 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.

தற்போது, நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடலான ‘ஊறும் பிளட்’ பாடல் யுடியூபில் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளைக் கடந்து அசத்தியுள்ளது.

இதுவே, சாய் அபயங்கரின் முதல் தமிழ் சினிமா பாடலாகும். இதற்கு முன் வெளியான மலையாளப் படமான பல்டியில் இடம்பெற்ற ஜாலக்காரி பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து ஊறும் பிளட்டும் டிரெண்ட் ஆகியுள்ளது.

இதையும் படிக்க: ரஜினி - 173 இயக்குநர் இவரா?

Summary

dude movie oorum blood song hits 100 million in youtube

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.