பிரணவ் மோகன்லால் - ராகுல் சதாசிவன் கூட்டணியில் உருவான திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
பிரம்மயுகம் படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் ஹாரர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் நைட் ஷிஃப்ட் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் 25 ஆம் தேதி துவங்கி சரியாக ஒரு மாதத்தில் நிறைவடைந்தது.
இப்படத்திற்கு ‘டைஸ் ஐரே’ (Dies irae) எனப் பெயரிட்டுள்ளனர். இதன் பொருள் லத்தீன் மொழியில் மரணத்தைக் குறிக்கிறது.
இந்த நிலையில், டைஸ் ஐரே படத்தின் டிரைலர் வெளியிட்டுள்ளனர். ஹாரர் படமாக உருவான இதன் காட்சிகள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
actor pranav mohanlal's dies irae trailer out now
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
