பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

பாம் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...
Bomb film poster. And this film release in september.
பாம் படத்தின் போஸ்டர். படம்: எக்ஸ் / சக்தி ஃபிலிம் ஃபேக்டரி
Published on
Updated on
1 min read

நடிகர் அர்ஜுன் தாஸின் நடிப்பில் வெளியான பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைப்படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் மற்றும் நடிகர் அர்ஜுன் தாஸ் ஆகியோரது கூட்டணியில் வெளியான திரைப்படம் “பாம்”.

நடிகர் அர்ஜுன் தாஸ் ரசவாதி திரைப்படத்திற்குப் பின் நாயகனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில், நடிகர்கள் காளி வெங்கட், நாசர், சிங்கம்புலி, பாலசரவணன், டி.எஸ்.கே, ஷிவாத்மிகா ராஜசேகர், அபிராமி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், பாம் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் வரும் அக். 10 வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The OTT release date of the film Palm, starring actor Arjun Das, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com