ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

பாலகிருஷ்ணாவின் அகண்டா - 2 கிளிம்ஸ் விடியோ!

பாலகிருஷ்ணாவின் அகண்டா - 2 படத்தின் கிளிம்ஸ் விடியோ.

News image
Updated On :24 அக்டோபர் 2025, 6:04 pm IST

நடிகர் பாலகிருஷ்ணாவின் அகண்டா - 2 படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த தெலுங்குப் படம் அகண்டா. இப்படத்தில் பிரக்யா ஜைஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா உள்ளிட்டோர் நடித்து இருந்தார்கள்.

இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று அதிக வசூலை அள்ளியது. ஹாட்ஸ்டார் ஓடிடியிலும் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அகண்டா திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியானது.

அகண்டா முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே அகண்டா இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். அகண்டா இரண்டாம் பாகத்துக்கும் தமன் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், இந்தப் படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அகண்டா -2 திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The teaser video of actor Balakrishna's film Akhanda - 2 has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.