கென் கருணாஸ் இயக்கும் படத்தின் பெயர்!

கென் கருணாஸ் இயக்கும் படத்தின் பெயர்!

கென் கருணாஸ் படத்தின் பெயர்...
Published on

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, நடித்துவரும் படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அம்பாசமுத்திரம் அம்பானி, நெடுஞ்சாலை படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரைக்கு அறிமுகமானவர் கென் கருணாஸ். இயக்குநர் வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியில் உருவான அசுரன் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

அப்படத்தைத் தொடர்ந்து விடுதலை - 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே, தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

தற்போது, கென் கருணாஸ் இயக்குநராக புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை அவரின் தந்தையும் நடிகருமான கருணாஸ் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திற்கு ‘காதலன்’ எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஸ்ரீதேவி, அனிஷ்மா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

Summary

reports suggests actor ken karunas new film titled as kadhalan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com