தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே வசூல் மழை! 9 நாள்களிலேயே இவ்வளவா?

ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே படத்தின் வசூல் குறித்து...

Spider man: Brand New Day

ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே - மார்வெல்

Published On :

மார்வெல் ஸ்டூடியோஸின் ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே படம் உலகளவில் ரூ. 13,500 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரிட்டோன் இயக்கத்தில் டாம் ஹாலண்ட், ஜெண்டாயா, ஜேக்கப் பேட்டலான், மார்க் ருஃபாலோ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம், உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ஜூலை 31 ஆம் தேதியில் வெளியானது. ஆனால், சிறப்புக் காட்சியாக இந்தியாவில் ஜூலை 30 ஆம் தேதியிலேயே வெளியானது.

மார்வெல்லின் 38-வது திரைப்படமாகவும், எம்சியூவின் ஸ்பைடர்மேன் சீரியஸின் 4வது படமாகவும் வெளியாகியிருக்கும் ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே படம், 225 மில்லியன் டாலர் செலவில் (சுமார் ரூ. 2,146 கோடி) உருவாக்கப்பட்டது.

ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே, இந்தியாவில் வெளியான முதல் நாளிலேயே சுமார் ரூ. 72.44 கோடி வசூலித்து, இந்தியாவில் முதல் நாளிலேயே அதிகம் வசூலித்த முதல் ஹாலிவுட் படம் என்ற சாதனை படைத்தது.

இந்த நிலையில், இந்தியாவில் வெளியான 9 நாள்களிலேயே ரூ. 418 கோடிக்குமேல் இப்படம் வசூலித்துள்ளதாகவும், உலகளவில் ரூ. 13,500 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இன்னும் சில நாள்களிலேயே ரூ. 15,000 கோடி வசூலித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, படத்தில் நடித்துள்ள டாம் ஹாலண்ட் - ஜெண்டாயாவுக்கு இங்கிலாந்தில் திருமணமும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. நீண்டகாலமாகக் காதலித்து வந்த இருவரும், தங்களின் திருமணத்தை குறைவான விருந்தினர்களுடன் ரகசியமாக நடத்தியுள்ளனர்.

Summary

‘Spider-Man: Brand New Day’ Becomes Highest-Grossing Movie of 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.