கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

5.2 கோடி பார்வைகளைக் கடந்த சூர்யாவின் பட்டாம்பூச்சி பாடல்!

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் பட்டாம்பூச்சி பாடல் இணையத்தில் வைரல்.

News image

பட்டாம்பூச்சி பாடல் - படம்: எக்ஸ்

Updated On :10 ஆகஸ்ட் 2026, 4:31 pm IST

நடிகர் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் பட்டாம்பூச்சி பாடல் இணையத்தில் 5.2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கருப்பு திரைப்படத்தைத் தொடர்ந்து வெளியாகும் படமென்பதால் சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நாயகியாக மமிதா பைஜூவும் முக்கிய பாத்திரங்களில் நடிகை ராதிகா, ரவீனா தண்டன் ஆகியோர் நடித்துள்ளனர். உறவுகளின் மேன்மையைப் பேசும் கதையாக எடுக்கப்பட்ட இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் பெரியளவில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இதனிடைய, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” படத்தின் “பட்டாம்பூச்சி” எனும் பாடல் கடந்த ஜூன் 19 ஆம் தேதி வெளியானது. இந்தப் பாடலுக்கு அருண்ராஜா காமராஜ் வரிகளை எழுத சுப்லாக்‌ஷினி பாடியுள்ளார்.

யூடியூபில் பட்டாம்பூச்சி பாடல், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சேர்த்து 5.2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

Summary

The song Pattampoochi from the movie Viswanath and Sons, starring actor Suriya, has crossed 52 million views.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.